என் மனைவிக்கு தமிழில் கெட்டவார்த்தை தெரியும்: 'எல்ஜிஎம்' ஆடியோ விழாவில் தோனி கலகல பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தோனி தயாரித்த ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் நேற்று சென்னையில் நடந்த நிலையில் அதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தோனி ஜாலியாக பேசினார்.
‘எனக்கு தமிழில் சில கெட்ட வார்த்தைகள் தெரியும் என்று என் மனைவி கூறினார், ஆனால் எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது, மற்ற மொழிகளில் கெட்ட வார்த்தை தெரியும், ஆனால் நான் அவருக்கு எந்த கெட்ட வார்த்தையும் கற்பிக்கவில்லை.
உங்களில் எத்தனை பேர் இங்கே திருமணம் செய்து கொண்டீர்கள்? திருமணம் செய்த அனைவருக்கும் உங்கள் வீட்டின் முதலாளி யார் என்று தெரியும். ஒரு திரைப்படம் தயாரிப்போம் என்று என் மனைவி சொன்ன போது நான் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசவில்லை.
சென்னை எனக்கு மிகவும் ஸ்பெஷல், எனது முதல் டெஸ்ட் அறிமுகம் சென்னையில் தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச டெஸ்ட் மேட்ச் ரன்கள் சென்னையில் தான் உள்ளது. இப்போது என்னுடைய முதல் தயாரிப்பு திரைப்படம் தமிழில் தான். தமிழ்நாட்டு மக்கள் என்னை தத்து எடுத்துக் கொண்டார்கள். இந்த மாநிலத்தின் மீது என்னுடைய அன்பு காரணமாகத்தான் முதல் திரைப்படத்தை தமிழில் தயாரித்தோம்.
‘எல்ஜிஎம்’ திரைப்படம் மிக வேகமாக எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, இதை நாங்கள் சாதனையாக படம் ஆக்கினோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும், அதே போல் பட குழுவினர்களுக்கு நல்ல உணவை வழங்குங்கள் என்று நான் படக்குழுவினருக்கு தெரிவித்தேன்.
‘எல்ஜிஎம்’ அனைவரும் பார்க்கும் வகையில் நல்ல படம், நான் என் மகளுடன் கூட இந்த படத்தை பார்க்க முடியும். ஒரு பையன் தன் அம்மாவுக்கும் காதலிக்கும் இடையே மாட்டிக்கொண்டு பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் நதியா கண்களிலேயே பேசி நடித்துள்ளார். நதியா மற்றும் இவானா மாமியார் மருமகளாக நடித்துள்ளார்கள். நாயகன் ஹரிஷ் கல்யாண் ஆடியோ விழாவில் நிறைய பேசினார், ஆனால் படத்தில் அவருக்கு குறைவான வசனங்கள் தான் உள்ளது, ஏனெனில் இரண்டு பெண்கள் அவரை பேச விடவில்லை’ இவ்வாறு தல தோனி பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout