தோனியின் ஆட்டமா இது? நெட்டிசன்கள் கிண்டல்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 338 என்பது கடினமான இலக்காக இருந்தாலும், ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்ததால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு தான் அதிகம் இருந்தது.

குறிப்பாக 39 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியும் 39 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்ததால் மீதமுள்ள 11 ஓவர்களில் கண்டிப்பாக இந்திய அணியால் வெற்றிக்கு தேவையான இலக்கை எட்டியிருக்க முடியும். அதற்கேற்ற வகையில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினார்.

ஆனால் ஹர்திக் அவுட் ஆன பின்னர் தோனியும், கேதார் ஜாதவ்வும் ஆமை வேகத்தில் விளையாடினர். ஹர்திக் அவுட் ஆன பின்னர் 30 பந்துகளில் 71 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருந்தது. தோனி போன்ற ஹிட்டர்களுக்கு இது சாத்தியமான ஸ்கோர் தான். இதே நிலை பலமுறை ஐபிஎல் போட்டியில் இருந்தபோது தோனி வெற்றி பெற்று தந்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் வெற்றிக்கான முயற்சியை கூட அவர் எடுக்கவில்லை என்பது தோனியின் தீவிர ரசிகர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 47 மற்றும் 48 ஆகிய இரண்டு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சரை கூட தோனி அடிக்க முயற்சிக்கவில்லை. சிங்கிளை மட்டுமே குறி வைத்திருந்தார். இந்த இரண்டு ஓவர்களிலும் ஓரளவுக்கு அடித்து ஆடியிருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இதனை வர்ணனை செய்து கொண்டிருந்த சவுரவ் கங்குலியும் கூறி ஆதங்கம் கொண்டார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 44 ரன்கள் என்ற அடைய முடியாத இலக்கு இருந்தபோது ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் தோனி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் நேற்றைய இந்திய அணியின் தோல்வியால் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது என்பதை தவிர வேறு ஒரு விசேஷமும் இல்லை. அதுமட்டுமின்றி காவி நிற ஜெர்ஸியால்தான் இந்தியா தோல்வி அடைந்தது என்று வேலையில்லாத நெட்டிசன்கள் பதிவு போடுவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.

More News

இந்த வாரம் வெளியேற போவது யார்? பிக்பாஸ் நாமினேஷன் தொடங்கியது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படாத

ஊட்டியில் மரங்கள் இருந்தும் பயனில்லை: வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதோடு அவ்வப்போது மரங்கள் நடும் சமூக பணியையும் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே.

'தர்பார்' படத்தில் மரணமாஸ் பாடல்: எஸ்பிபி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அவருடைய மாஸ் ஓப்பனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி வருவது தான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம்.

தங்க மெடல்களை வென்று குவித்த பிரபல நடிகரின் மகன்!

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்பதும்

அடுத்த பிக்பாஸ் வீட்டின் தலைவர் மீராமிதுனா? வனிதாவுக்கு இருக்கு தரமான சம்பவம்!

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த பதவி ஏதோ முதலமைச்சர் பதவி போல் வானாளவிய அதிகாரம் கொண்ட பதவி என நினைத்து கொண்டு வனிதா