என்னுடைய செயல் கடுப்பை ஏற்படுத்தலாம், ஆனால்.. வெற்றிக்கு பின் தல தோனி பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னோட செயல் கடுப்பை ஏற்படுத்தலாம் ஆனால்.. என தல தோனி நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பின்னர் தல தோனி பேட்டி அளித்த போது சில சுவாரசியமான தகவல்களை கூறினார்.
ஐபிஎல் என்பது மிகவும் பெரியது என்று நான் நினைக்கிறேன். இதுவரை 8 அணிகள் இருந்த நிலையில் தற்போது 10 அணிகள் இருப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டியது உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் அணியினர் கடினமாக உழைத்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்பதும் ஜடேஜா போன்ற பந்துவீச்சாளர்கள் எதிர் அணியை கட்டுப்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் நான் பீல்டிங்கை அடிக்கடி மாற்றிக் கொள்வது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. அடிக்கடி நான் பில்டிங்கை மாற்றுவதால் எனது சக வீரர்கள் எரிச்சலுடன் இருக்கக்கூடும். ஆனால் நான் என் உள்ளுணர்வை நம்புகிறேன், அதன்படி தான் நான் நடக்கிறேன். அதனால்தான் எப்போதும் ஃபீல்டர்களிடம் என்னை கண்காணிக்க சொல்லிக் கொண்டே இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து கூறிய தல தோனி ’அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து வரும் டிசம்பர் மாதம் தான் முடிவு செய்வேன். டிசம்பர் மாதம் மினி ஏலம் முடிந்த பிறகு என்னுடைய உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடுவேனா என்பதை கூறுவேன் என்று தெரிவித்தார். மேலும் சிஎஸ்கே அணியை விட்டு நான் எப்போதும் செல்ல மாட்டேன் என்றும் ஆடும் லெவன் அணியில் இருப்பேன் அல்லது சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
When Thala talks,we listen! ✨pic.twitter.com/c51mtlEPaV
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com