தீபக் சஹாருக்கு கையெழுத்து போட மறுத்த தோனி.. என்ன காரணமாக இருக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கும் அணியின் கேப்டன் தல தோனிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதான மைதானத்திலேயே துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபக் சாஹர் நேற்று தான் அணிந்திருக்கும் சிஎஸ்கே ஜெர்சியில் எம்எஸ் தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டபோது தோனி முதலில் போட மறுத்துவிட்டார். அதன் பிறகு தீபக் சாஹர் கட்டாயப்படுத்திய பிறகு கையெழுத்து போட்டார்.
ஒரு அணியில் இடம் பெற்றுள்ள வீரர் அணிந்துள்ள ஜெர்ஸியில் கையெழுத்து போடுவது அந்த அணியை அவமதிப்பது போன்றது என்று கூறப்படுவதால் தோனி கையெழுத்து போட மறுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் வெற்றி கொண்டாட்டத்தின் போது தீபக் சாஹரை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என்றுதான் கடைசியில் அவர் கையெழுத்து போட்டார்.
அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கொடுத்த ஒரு மிக எளிதான கேட்சை தீபக் சாஹர் கோட்டை விட்டதும் அவர் மீது தோனிக்கு மன வருத்தம் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments