தோனி சாதனையை முறியடித்த இந்திய வீரர்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த 5ஆம் தேதி கேப்டவுன் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக அணி 286 ரன்களும், இந்திய அணி 209 ரன்களும் எடுத்துள்ளது.

நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக தென்னப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் ஐந்து விக்கெட்டுக்களையும் ஷமி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடி வரும் சகா, பத்து கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அவர் தோனியின் சாதனையை முறியடித்து ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

More News

தல அஜித்துக்காக வித்தியாசமான கேரக்டர் வைத்திருக்கும் மோகன்ராஜா

சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பணிபுரியும் தற்காலிக கண்டக்டர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கண்டக்டராக பணிபுரியும்போது அவருடைய ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டிய வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகளை கடத்துவதாக அவரது தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஷ்புவிடம் சிக்கி சின்னாபின்னாமான அந்த குமாரு யாரு?

குஷ்புவையே ஆத்திரப்பட வைத்துள்ளார் ஒரு மர்ம மனிதர். சமீபத்தில் குஷ்பு, ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்

உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டாம்: கோபத்தில் கொந்தளித்த சித்தார்த்

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'அவள்' படத்தை பார்க்க தவறியவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கொள்ளலாம்