close
Choose your channels

கொடுத்த வாக்கு தான் முக்கியம்.. வியாபாரத்தில்  தோனி கடைபிடிக்கும் நேர்மை..!

Sunday, July 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள ’எல்ஜிஎம்’ என்ற படத்தின் வியாபாரத்தில் தோனி கடைப்பிடித்த நேர்மையை பார்த்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமடைந்து வருகின்றனர்

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’எல்ஜிஎம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்திவேல் என்பவர் கேட்டு இருந்ததாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆடியோ ரிலீசுக்கு பின்னர் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் பல விநியோகஸ்தர்கள் சக்திவேல் கேட்டதை விட கூடுதல் தொகைக்கு கேட்டதாகவும் ஆனால் தோனி தன்னை நம்பி முதலில் வந்து பேசியவர் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் கொடுத்த வாக்கு முக்கியம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

கிரிக்கெட் விளையாட்டை போலவே வியாபாரத்திலும் அவர் நேர்மையை கடைப்பிடித்து வருவதை பார்த்த கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி தோனியை இந்தியாவே தோனியை கொண்டாடி வருவதற்கு அவரது நேர்மையும் ஒரு காரணம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment