குறைந்த விலையில் தட்டித்தூக்கிய தரமான வீரர்கள்: தோனியின் மாஸ்டர் பிளான்!
- IndiaGlitz, [Monday,February 14 2022]
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடந்த நிலையில் தோனியின் மாஸ்டர் பிளானால் குறைந்த விலையில் தரமான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஏலத்தில் முன்னணி வீரர்கள் ஏலம் விடப்பட்டு கொண்டிருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் கிண்டலடிக்கப்பட்டது.; ஏற்கனவே அணியில் இருந்த வயதான போட்டியாளர்களான அம்பத்தி ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டூபிளஸ்சிஸ், ஷர்துல் தாக்கூர், ஹேசில்வுட் போன்ற அணியில் இருந்த நல்ல வீரர்களையும் தக்கவைத்து கொள்ளவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் கடைசி நேரத்தில் தோனியின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது
அதாவது கடைசி கட்டத்தில் திடீரென அடுத்தடுத்த வீரர்களை பிளான் செய்து சிஎஸ்கே நிர்வாகிகள் ஏலம் எடுத்தனர். அதுவும் குறைந்த விலையில் தரமான வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மற்ற அணிகள் தோனியின் மாஸ்டர் பிளானை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன
ஒடிசாவை சேர்ந்த தொடக்க வீரர் சேனாதிபதியை 20 லட்சத்திற்கும், நியூசிலாந்து முன்னணி ஓபனிங் டுவன் கான்வேவை ஒரு கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர்கள் இருவரும் டூபிளஸ்சிஸ்க்கு மாற்றாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நியூசிலாந்து நாட்டின் முன்னணி பந்துவீச்சாளர் மிச்செல் சாண்ட்னரை ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ளார் என்பது தெரிந்ததே
அதேபோல் தென்னாபிரிக்க வீரர் டுவைன் பிரெடோரியஸ் ரூபாய் 50 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுத்துள்ளது. சிமர்ஜித் சிங் ரூ.20 லட்சம், இலங்கை பந்து வீச்சாளர் மகிஷ் தீட்சணாவை ரூபாய் 70 லட்சம் என அடுத்தடுத்து ஒரு கோடிக்கு ரூபாய்க்கு உள்ளாகவே தட்டி தூக்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்த அத்தனை வீரர்களும் தற்போது நன்றாக ஃபார்மில் உள்ளவர்கள் என்பதும் அது மட்டுமின்றி எதிர்காலத்தில் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நன்றாக விளையாடிய ருத்ராஜ் உள்பட ஒருசில தற்போது இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் நிலையில் இதேபோல் மற்ற வீரர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், தோனியின் மாஸ்டர் பிளான் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் அவரது திட்டப்படியே ஏலம் எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.