கிரிக்கெட்-கபடியை இணைக்கும் 'தோனி கபடிக்குழு'
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் விளையாட்டு சம்பந்தமான திரைப்படங்களுக்கு என ஒரு தனி மரியாதையும் வரவேற்பும் உண்டு. 'வெண்ணிலா கபடிக்குழு', 'எதிர்நீச்சல்' முதல் தற்போது தயாராகி வரும் 'கனா' வரை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவதுண்டு.
அந்த வகையில் தற்போது கிரிக்கெட் மற்றும் கபடி ஆகிய இரண்டு விளையாட்டுக்களையும் இணைத்து 'தோனி கபடிக்குழு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் அய்யப்பன் இந்த படத்தை இயக்கவுள்ளார். கபடி மற்றும் கிரிக்கெட் ஆகிய இரண்டு விளையாட்டுகளில் புகழ் பெற்று இருக்கும் இருவரின் கதை தான் இந்த படத்தின் கதை
இந்த படத்தில் அபிலாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 'நாகேஷ் திரையங்கம்' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிலாஷூக்கு ஜோடியாக லீமா என்ற நடிகை நடிக்கவுள்ளார். இவர் மலையாள படம் ஒன்றில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த படம் குறித்து இயக்குனர் அய்யப்பன் கூறியபோது, 'நான் சிறுவயதில் கிரிக்கெட் மற்றும் கபடி ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். இந்த படத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் வரும். இந்த படத்தில் ஒரு சமூக அக்கறையுடன் கூடிய செய்தியும் உண்டு என்று அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout