கிங் எப்போதும் கிங்தான்… தோனியை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2021 தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் குவாலிஃபையர் போட்டி டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் தல தோனி எப்போதும்போல தனது பினிஷிங் டச்சைக் கொடுத்து சென்னை சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்தார்.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் களமிறங்கிய டெல்லி அணி அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. இதனால் 173 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சிஎஸ்கே நேற்றைய போட்டியில் வேறலெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
இதில் முதலில் களமிறங்கிய ருத்ராஜ் கெயிக்வாட் – டூபிளசிஸ் கூட்டணியில் 1 ரன்னிலேயே டூபிளசிஸ் அவுட்டாகி சிஎஸ்கே ரசிகர்களை பதற்றமடைய செய்தார். பின்பு ருத்ராஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளுக்கு 70 ரன்களை குவித்தார். அடுத்துவந்த ராபின் உத்தப்பா 44 பந்துகளுக்கு 66 ரன்களை வெளிப்படுத்தி இவரும் வேறலெவல் ஆட்டத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் ஷர்துல் தாகூர் ஒரே பந்தில் அவுட்டானதோடு அம்பத்தி ராயுடுவும் ஒரு ரன்னில் ஏமாற்றினார்.
இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் முதல் பந்திலேயே மொயின் அலி அவுட்டாக அடுத்து ஜடேஜா களமிறங்கினார். இப்படி சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எப்போதும்போல தல தோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ஃபாமில் இல்லை என்று தன்மீதான விமர்சனத்திற்கும் தோனி பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் தல தோனியின் பினிஷிங் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுவருகின்றனர். இதற்கிடையில் டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் “தோனி ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ராயுடு அவுட்டானவுடன் நாங்கள் ஜடேஜாவா அல்லது தோனியா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் நான் தோனிதான் வருவார் என்று உறுதியாக நம்பினேன். தோனிக்கு எதிரான திட்டத்தை நீங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் அவர் உங்களை ஆட்டிப்படைத்து விடுவார். தோனி ஓய்வு பெற்றதும் கிரிக்கெட் விளையாட்டில் பார்த்த மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுவார் என்று நான் நினைக்கிறேன்“ எனப் பாராட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout