தல தோனியின் சென்னை வருகை… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்துள்ளார். இவர் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியின் கேப்டனாக இருந்துவரும் அவர் தொடர்ந்து அணியில் வீரர்களைத் தேர்வு செய்வது மற்றும் ஐபிஎல் ஏலம் தொடர்பான விஷயங்களில் அணி நிர்வாகத்திற்கு உதவுவது எனப் பல்வேறு வகையில் நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 12,13 ஆம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 16 கோடிக்கும், தோனி 12 கோடிக்கும், மொயின் அலி 8 கோடிக்கும் ருத்துராஜ் கெயிக்வாட் 6 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 48 கோடி இருப்பில் இருக்கிறது.
இதையடுத்து வரவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த வீரர்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே தல தோனி சென்னை வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
The ?? goes ??, every single time! #ThalaDharisanam #WhistlePodu ?? pic.twitter.com/IihZJsuDVQ
— Chennai Super Kings - Mask P??du Whistle P??du! (@ChennaiIPL) January 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments