தோனியின் 'அதர்வா' கிராபிக்ஸ் நாவலில் கனெக்சன் ஆன சிம்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி ‘அதர்வா’ என்ற கிராபிக்ஸ் நாவலில் தோன்றியுள்ளார் என்பதும் இந்த நாவலின் டீசர் வீடியோவை தோனி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த ‘அதர்வா’ கிராபிக்ஸ் நாவலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கிராபிக்ஸ் நாவலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தோனியின் ‘அதர்வா’ கிராபிக்ஸ் நாவலுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு நாம் பார்த்திராத வித்தியாசமான தோனியின் அவதாரத்தை பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்றும் இந்த கிராபிக்ஸ் நாவலை எனது நெருங்கிய நண்பர் ரமேஷ் தமிழ்மணி என்பவர் தான் உருவாக்கி உள்ளார் என்றும் இந்த நாவலுக்கு சிவா சந்திரிகா என்பவர் தான் திரைக்கதை எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றும் அவர்களுடைய இந்த பயணம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தோனியின் ‘அதர்வா’ கிராபிக்ஸ் நாவல் சிம்புவின் நெருங்கிய நண்பரால் தான் உருவாக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#MSDhoni @msdhoni in a never before seen avatar! Check out the graphic novel @atharvaorigin authored by dear friend @ramesharchi and scripted by @shiva_chandrika! Very proud of the two of you and wish you only the best in the journey of #AtharvaTheOrigin https://t.co/QKthczyQS9 pic.twitter.com/E07RxygJi8
— Silambarasan TR (@SilambarasanTR_) February 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com