தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

கிரிக்கெட் உலகின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி சமீபத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் முதல் முதலாக ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது. தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ’எல்.ஜி.எம்’ (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாடியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க உள்ளார். தோனியின் மனைவி சாக்சி தோனி தயாரிக்கும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.