என்னை தக்கவைக்க வேண்டாம்- தோனியின் பேச்சால் ஆடிப்போன ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த ஐபிஎல் தொடருக்காக என்னை அதிகவிலை கொடுத்து தக்கவைக்க வேண்டாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியிருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் 14ஆவது சீசன் போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் புதிதிதாக 2 அணிகள் ஐபிஎல் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எனவே ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் துவங்கவுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ விதிமுறைப்படி ஒவ்வொரு அணிகளும் குறைந்த 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.
இந்த விதிமுறை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால் இந்தமுறை பிசிசிஐ வகுத்திருக்கும் விதிப்படி ஒரு அணி, 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அதன் முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அந்த அணி அதன் முதன்மை நபருக்கு 15 கோடி ஊதியம் கொடுக்க வேண்டும். அடுத்து ஒன்று அல்லது இரண்டு வீரர்களைத் தக்கவைக்கும் அணி முதன்மை வீரருக்கு ரூ.14 கோடி ஊதியம் கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் அதிகவிலை கொடுத்து என்னை சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள வேண்டாம். அது சிஎஸ்கேவிற்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று தல தோனி தெரிவித்து இருக்கிறார். காரணம் 40 வயதாகும் தோனி அடுத்த வருடம் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் “எம்.எஸ்.தோனி ஒரு நியாயமான மனிதர். அவர் எங்களிடம் அதிகதொகை கொடுத்து தன்னை தக்கவைக்க வேண்டாம். அது சிஎஸ்கேவுக்கு நஷ்டம்“ எனக்கூறினார். ஆனால் நாங்கள் அவரை விடபோவதில்லை. முன்பே கூறியபடி தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. அவர்தான் எங்களின் முதல் தேர்வு.
எனினும் அணியில் தோனியை போன்றே நீண்டகாலம் இருக்கும் வேறு வீரர்களுக்கு இதே சலுகையை கொடுக்க முடியாது. ஆலோசனைகளில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அவர்கள் மட்டும்தான் தக்கவைக்கப்படுவார்கள். கடினமான முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிஎஸ்கே அணியின் விளையாடிவரும் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் கைவிட்டு விடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments