தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில் குவிந்திருப்பதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது.
இந்த நிலையில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் சிஎஸ்கே உடையணிந்து உடல் முழுவதும் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து போட்டியை பார்க்க சென்று கொண்டிருந்தார். சிஎஸ்கே உடை அணிந்த அவரை அரசியல் கட்சியினர் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான தோனி ரசிகர் பின்னர் அரசியல் கட்சியினர்களிடம் இருந்து தப்பித்து போலீசார் ஒருவரிடம் புகார் கூரும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களையும் அரசியல் கட்சியினர் தாக்கி வருவது போராட்டம் வேறு திசையில் திரும்புவதையே காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
A #csk fan saying that he got beaten up badly. Is complaining to the cops @newsx #ipl #chennaisuperkings pic.twitter.com/xJx1WjAJn2
— Latha Srinivasan (@latasrinivasan) April 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments