close
Choose your channels

'கமான் பாப்பா' தல தோனிக்கு ஊக்கம் கொடுத்த மகள் ஜிவா

Wednesday, March 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று டெல்லியில் நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி நிதானமாக விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில் தோனி களத்தில் வெற்றிக்காக விளையாடி கொண்டிருந்தபோது அவரது மகள் ஜிவா, 'கமான் பாப்பா' என்று கோஷமிட்டு அவரை ஊக்குவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது அப்பாவை 'பாப்பா' என்று செல்லக்குரலில் ஜிவா கோஷமிட்டது அங்கிருந்தவர்களை மட்டுமின்றி அதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த அனைவரையும் கவர்ந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. அதேபோல் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் நூற்றுக்கணக்கான கமெண்ட்டுக்களையும் இந்த வீடியோவிற்கு பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment