தோனி, ரெய்னா அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு: பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டிக்கு பின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தோனி, ரெய்னா ஆகிய இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.