சென்னையில் சூப்பர் ஹிட் படத்தை பார்த்த தல தோனி.. உடன் வந்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,March 24 2024]

சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் தற்போது சென்னையில் சிஎஸ்கே அணி இருக்கும் நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் தல தோனி சூப்பர் ஹிட் படம் ஒன்றை பார்க்க தியேட்டருக்கு வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சத்யம் தியேட்டரில் தல தோனி மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் சூப்பர் ஹிட் படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படத்தை பார்க்க வந்தனர். படம் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது ரசிகர்கள் தோனி.. தோனி.. என்று கோஷமிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் பாதுகாப்பில் இருந்தவர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்திய நிலையில் அடுத்த போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் 26ஆம் தேதி குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. இதற்கான பயிற்சியில் தற்போது சிஎஸ்கே அணி உள்ளது.

 

More News

பிரபலத்துடன் ஒற்றைக் காலில் நிற்கும் கமல்ஹாசன்.. வைரல் புகைப்படம்..!

பிரபல டான்ஸ் மாஸ்டர் உடன் ஒற்றைக் காலில் நிற்கும் புகைப்படத்தை உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பெண் இயக்குனரின் இயக்கத்தில் தன்ஷிகா படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனரான ராதிகாவின் இயக்கத்தில் நடிகை சாய் தன்ஷிகா நடிக்கும் படம் குறித்த ஃபர்ஸ்ட் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்ய வம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன், நிஜத்தில் எம்பி ஆக்குவேன்: சரத்குமார் பேட்டி..!

'சூர்யவம்சம்' திரைப்படத்தில் என் மனைவி கேரக்டரில் நடித்தவரை கலெக்டர் ஆக்கியது போல் நிஜத்தில் என் மனைவியை பாராளுமன்ற எம்பி ஆக்குவேன் என்று நடிகர் அரசியல்வாதியுமான சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.

கார்த்தி - நலன் குமாரசாமி பட டைட்டிலை உறுதி செய்த ஓடிடி நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் 'கார்த்தி 26' என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பதும்

ரஜினி, விஜய் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மகனுடன் சென்று வருங்கால கணவருக்கு வைத்த விருந்து..!

ரஜினி, விஜய், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்த நிச்சயதார்த்தத்தில் தனது மகனுடன் சென்ற நடிகை வருங்கால கணவருக்கு விருந்து