சென்னையில் சூப்பர் ஹிட் படத்தை பார்த்த தல தோனி.. உடன் வந்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Sunday,March 24 2024]
சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் தற்போது சென்னையில் சிஎஸ்கே அணி இருக்கும் நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் தல தோனி சூப்பர் ஹிட் படம் ஒன்றை பார்க்க தியேட்டருக்கு வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சத்யம் தியேட்டரில் தல தோனி மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் சூப்பர் ஹிட் படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படத்தை பார்க்க வந்தனர். படம் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது ரசிகர்கள் தோனி.. தோனி.. என்று கோஷமிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் பாதுகாப்பில் இருந்தவர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்திய நிலையில் அடுத்த போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் 26ஆம் தேதி குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. இதற்கான பயிற்சியில் தற்போது சிஎஸ்கே அணி உள்ளது.
#Dhoni and #DeepakChahar watched #ManjummelBoys at Sathyam last night.
— Haricharan Pudipeddi (@pudiharicharan) March 24, 2024
pic.twitter.com/MZ9A3AN1BO