சந்தானம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Friday,September 16 2016]

கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனரான 'லொள்ளுசபா' ராம்பாலா, தற்போது தனது இரண்டாவது படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.
ராம்பாலாவின் 2வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த் படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்தின் ஸ்டேபன் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ், கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ்லீ', ராஜீவ் மேனன் படம்' 'அடங்காதே' போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சூர்யா 35' படத்தில் இணைந்த 2 பிரபல காமெடியன்கள்

'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து சூர்யாவின் 35வது...

ஏ.ஆர்.முருகதாசுக்கு மகேஷ்பாபு விடுத்த வேண்டுகோள்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில்...

அஜித்தின் ஈகோ குறித்து பிரபல நடிகர் கூறும் கருத்து

அஜித் ஒரு நல்ல நடிகர் என்பதை விட அவர் ஒரு மனிதத்தன்மை உடையவர், ஈகோ இல்லாதவர், எளிமையானவர் என்ற வகையிலே அவரை பலருக்கு பிடிக்கும்...

விஜய்யின் மாஸ் பாடலுக்கு காரணமான மிஷ்கின்

பிரபல இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கிய 'யூத்' உள்பட ஒருசில படங்களில் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்...

பாரதிராஜாவுடன் முதன்முதலாக இணையும் மம்முட்டி

இயக்குனர் இமயம் பாரதிராஜா மிகச்சிறந்த இயக்குனர் மட்டுமின்றி நல்ல நடிகராகவும் பல படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இந்நிலையில்