கொங்கு நாட்டுச் சிங்கம் தீரன் சின்னமலை வரலாறு… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களின் விடுதலைக்காக நின்ற ஒரு தலைவர் தீரன் சின்னமலை. அதோடு கட்டபொம்மனை எதிர்த்தவர்களை தனது எதிரியாகப் பாவித்து பல அதிகாரிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவர். மேலும் கப்பம் கட்டும் முறையை எதிர்த்து பலமுறை ஆங்கிலேயே ஆட்சியோடு போர்த் தொடுத்தவர். இப்படி ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்த தீரன் சின்னமலை இன்றைக்கு ஒரு இனத்துக்கு மட்டும் தலைவர் என்பது போல புரிந்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்.
அதுவும் கொங்கு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்துக்கான தலைவர் என்பதுபோல பலரும் தீரன் சின்னமலையின் தியாகத்தை குறைத்து மதிப்பிட்டு வருகின்றனர். ஆனால் அன்றையக் காலத்தில் இந்த நிலத்துக்குச் சொந்தக்காரன், என்னை யார் அதிகாரம் செய்வது போன்ற கேள்வியையும் தீரன் சின்னமலை அவர்கள் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள், போர்கள், சதித் திட்டத்தால் தூக்கிலிடப்பட்ட கதை போன்றவற்றை தொகுத்து எளிய வடிவில் vaarta ஆப் வழங்கி உள்ளது. இந்த ஆடியோ வடிவம் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக் கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.