close
Choose your channels

சிறுமி ஹாசினியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த் திடீர் பல்டி

Friday, December 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாகவும், கடந்த நவம்பர் மாதம் பெற்ற தாயையே கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த், போலீசாரின் பிடியில் இருந்து தப்பி பின்னர் மீண்டும் பிடிபட்டார்

இந்த நிலையில் இவர் மீதான வழக்கு குறித்த விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக தஷ்வந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இதுவரை 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த தஷ்வந்திடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தஷ்வந்த் செய்தியாளர்களை பார்த்து 'சிறுமி ஹாசினி மற்றும் எனது தாயாரை நான் கொலை செய்யவில்லை. செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விபரங்களையும் அளிக்க தயார் என்று கூறினார். தஷ்வந்த் திடீரென தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து பல்டி அடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment