அடுத்த வாரம் வரிசையா வருவிங்க.. எவிக்சனுக்கு பின் 6 பேர் டீமை வச்சு செஞ்ச தர்ஷா குப்தா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஜய் சேதுபதி உடன் பேசிய பிறகு, வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் ‘சுனிதா, மேனேஜரும் நீங்க தான், கஸ்டமரும் நீங்க தான் என சொல்லும்போது, சுனிதா குறுக்கிட்டுக் கொண்டு, "ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்ல போகிறாய்; அதுதானே உன் கவலை?" என்று கேட்கிறார்.
அதற்கு தர்ஷா "அதெல்லாம் எனக்கு கவலை இல்லை; நீங்களே ஒன்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வருவதற்கு முன்னாடியே, உன் கவலை இதுதானா என்று சொல்லியே என்னை அனுப்பிட்டீங்க. வெளியில வந்து நிறுத்தலையா?" என்று கூறினார். இதற்கு சுனிதா, "ஐயோ கடவுளே!" என்று பதிலளிக்கிறார்.
அதன் பின், "உங்களுக்கெல்லாம் நான் வெளியேறியது மகிழ்ச்சியாக இருக்கும்; குறிப்பாக ஆறு பேர் கொண்ட குழுவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாமினேஷன் ப்ரீ பாஸ் கேட்டு கெஞ்சினேன், கதறினேன், ஆனாலும், ஒரு துளி இரக்கமில்லாமல் நீங்களே வச்சுக்கிட்டீங்க; அடுத்த வாரம் வரிசையாக வருவீங்க!" என்று கூற, ஆறு பேர் கொண்ட குழுவினர் உட்பட அனைவரும் கைதட்டி செய்கிறார்கள். மேலும் அந்த ஆறு பேருல சுனிதாவும் ஜாக்குலினும் போய்விட்டா நல்லாயிருக்கும். தர்ஷிகா கேப்டனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் கெத்தா இருக்காங்க. வரும்போதே ரெண்டு அப்ரசிண்டிஸ்களை கூட்டிட்டு வந்துருக்காங்க, துணி துவைச்சு போட’ என்று வச்சு செய்தார்.
எலிமினேஷனில் வெளியேறும் நாளில் சுனிதா உள்பட ஆறு பேர் கொண்ட குழுவை தர்ஷா குப்தா வச்சு செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments