அடுத்த வாரம் வரிசையா வருவிங்க.. எவிக்சனுக்கு பின் 6 பேர் டீமை வச்சு செஞ்ச தர்ஷா குப்தா..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஜய் சேதுபதி உடன் பேசிய பிறகு, வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் ‘சுனிதா, மேனேஜரும் நீங்க தான், கஸ்டமரும் நீங்க தான் என சொல்லும்போது, சுனிதா குறுக்கிட்டுக் கொண்டு, ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்ல போகிறாய்; அதுதானே உன் கவலை? என்று கேட்கிறார்.

அதற்கு தர்ஷா அதெல்லாம் எனக்கு கவலை இல்லை; நீங்களே ஒன்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வருவதற்கு முன்னாடியே, உன் கவலை இதுதானா என்று சொல்லியே என்னை அனுப்பிட்டீங்க. வெளியில வந்து நிறுத்தலையா? என்று கூறினார். இதற்கு சுனிதா, ஐயோ கடவுளே! என்று பதிலளிக்கிறார்.

அதன் பின், உங்களுக்கெல்லாம் நான் வெளியேறியது மகிழ்ச்சியாக இருக்கும்; குறிப்பாக ஆறு பேர் கொண்ட குழுவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாமினேஷன் ப்ரீ பாஸ் கேட்டு கெஞ்சினேன், கதறினேன், ஆனாலும், ஒரு துளி இரக்கமில்லாமல் நீங்களே வச்சுக்கிட்டீங்க; அடுத்த வாரம் வரிசையாக வருவீங்க! என்று கூற, ஆறு பேர் கொண்ட குழுவினர் உட்பட அனைவரும் கைதட்டி செய்கிறார்கள். மேலும் அந்த ஆறு பேருல சுனிதாவும் ஜாக்குலினும் போய்விட்டா நல்லாயிருக்கும். தர்ஷிகா கேப்டனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் கெத்தா இருக்காங்க. வரும்போதே ரெண்டு அப்ரசிண்டிஸ்களை கூட்டிட்டு வந்துருக்காங்க, துணி துவைச்சு போட’ என்று வச்சு செய்தார்.

எலிமினேஷனில் வெளியேறும் நாளில் சுனிதா உள்பட ஆறு பேர் கொண்ட குழுவை தர்ஷா குப்தா வச்சு செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

More News

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. செல்வராகவன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி

பெரியார் உள்பட தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் யார் யார்? தவெக மாநாட்டில் பேசிய விஜய்..!

அரசியலில் ஜெயிக்கணும்னா பலமான முதல் சக்தியை முதன்மை சக்தியாக இருக்கும். அதுக்கு நல்ல கொள்கைகள் தேவை. கொள்கைகள் தான் அரசியலுக்கான டிஸிப்ளின்.

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலர் ஏன்: தவெக தலைவர் விஜய் விளக்கம்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்த நிலையில் இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள்,

மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சி.. திமுகவை எதிரி என அறிவித்த விஜய்..!

மக்கள் விரோத அரசை நடத்தி அதனை 'திராவிட மாடல்' என ஏமாற்றுகின்றனர்  என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் வைத்தது ஏன்? விஜய் விளக்கம்..!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை கட்சிக்கு எதற்காகத் தேர்வு செய்தோம் என்பதற்கான விளக்கத்தை நடிகர் விஜய் இன்றைய மாநாட்டில் தனது பேச்சில் எடுத்துக்காட்டியுள்ளார்.