'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் நாயகியா?

  • IndiaGlitz, [Saturday,December 19 2020]

இயக்குனர் மோகன் இயக்கிய ’திரௌபதி’ திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’திரௌபதி’ படத்தை அடுத்து ’ருத்ரதாண்டவம்’ என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம், ஈசன் அருளால் அனைத்து செயல்களும் நல்லதே நடக்கும் என்றும் சமீபத்தில் இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்

இந்த படத்திலும் ’திரௌபதி’ படத்தில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் வந்துள்ளது

’ருத்ரதாண்டவம்’ படத்தின் நாயகியாக நடிக்க தர்ஷா குப்தா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை இவர் இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கிறார் என்றும் இவருக்கும் ஷிவானி நாராயணன் ஆகிய இருவருக்கும் தான் இன்ஸ்டாகிராமில் கடும் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி ’முள்ளும் மலரும்’ ’மின்னலே’ ’செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி 2’ என்ற ரியாலிட்டி தொடரில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

’ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா அறிமுகமாகிறார் என்று இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் தர்ஷா, பெரிய திரையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வெற்றி நடிகையாக வலம் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'மாஸ்டர்' படத்துடன் மோத முடிவு செய்த பிரபல நடிகர்: இதற்கு முன் மோதியபோது என்ன ஆயிற்று?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்றும் அந்தப் படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த

புத்தாண்டில் டபுள் ஸ்பெஷல்: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி!

உலகம் முழுவதும் புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் புத்தாண்டை கொண்டா அனைவரும் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

மனைவியுடன் பேசிய நண்பனை கழுத்தறுத்து கொலை: சென்னை சம்பவத்தின் சிசிடிவி காட்சி!

தன்னுடைய மனைவியுடன் பேசிய ஒருவரை அவருடைய நண்பரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் அந்தோணியுடன் இணைந்து சரிகம வழங்கும் இசை விருந்து!

அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் சரிகம இணைந்து ’கார்வான் லவுஞ்ச்

என் பின்பக்கத்தை தட்டினார்கள்: இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!

இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என பகீர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது