ஆஹா குஷி… கோவா வைப்ஸ்… நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,February 19 2022]

தமிழ் தொலைக்காட்சியைத் தொடர்ந்து சமூகவலைத் தளங்கள் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி ஒருசில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மாடலிங் துறையில் கிடைத்த வரவேற்பு மூலமாக தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் நடிகை தர்ஷா குப்தா. பல பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இயக்குநர் மோகன்ஜி இயக்கத்தில் கடந்த 2021 அக்டோபரில் வெளியான “ருத்ரதாண்டவம்“ திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகை தர்ஷா குப்தாவின் நடிப்பும் பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது சன்னிலியோன நடிக்கும் “ஓ மை கோஸ்ட்“ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். மேலும் கொரோனா நேரத்தில் சமூகவலைத்தளங்களில் அதிக நேரங்களைச் செலவிட்ட இவர் சில சமூகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்தார். அந்த வகையில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த இவர் தற்போது மீடியாவிலும் படு ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தற்போது கோவா சென்றுள்ளார். மேலும் சிவப்பு நிறத்தில் கிளாமரான உடையணிந்த அவர் கோவா திரைப்படத்தில் வரும் கோ கோ கோவா… ஆஹா குஷி, அழகை ரசி என வரும் மெல்லிசையை தனது வீடியோவில் இசைக்க வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

More News

வாக்களிக்க வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த போது வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருடன் நடித்த நடிகை திடீர் கைது: சிறையில் அடைப்பு!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் உடன் நடித்த நடிகை ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மழலையர் பள்ளி மீது குண்டுவீச்சு… உக்ரைனில் அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யாவிற்கு

1,000 காதலிகளைக் கொண்ட விசித்திர மனிதனுக்கு 1,045 வருடச்சிறை… நடந்தது என்ன?

துருக்கிய நாட்டைச் சேர்ந்த மதப் போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் கடந்த ஆண்டு 1,045 வருடங்கள் சிறை

தங்கையின் கடைசி ஆசை… 9 கோடி ரூபாயை திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்கிய அக்கா!

சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருமணம் செய்துகொள்ளாத