close
Choose your channels

தமன்னா படத்தின் டப்பிங் முடிந்தது. ரிலீஸ் எப்போது?

Thursday, May 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வந்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் படக்குழுவினர்களுக்கு குறிப்பாக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இந்த படத்தில் தமன்னா முதன்முதலாக சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு பின்னர் சீனுராமசாமியின் படம் என்றாலே தேசிய விருது பெறக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பக்கா மதுரை பெண்ணாக நடித்துள்ள தமன்னாவுக்கு விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் இயக்குனரின் அறிவுரைக்கு ஏற்ப தமன்னா சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment