தர்மதுரை', 'ஜோக்கர்', 'கபாலி' படங்களின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,August 22 2016]
சுதந்திர தின விடுமுறை வாரத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் புதிய மற்றும் அதற்கு முன்னர் வெளியான திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று வெளியான 'தர்மதுரை' ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிப்போர்ட் காரணமாக நல்ல ஒப்பனிங் வசூலை பெற்றது. சீனுராமசாமி இயக்கிய இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 289 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,14,57,280 வசூல் செய்துள்ளது. திரையரங்குகள் 90% நிரம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின வாரத்தில் வெளியான 'ஜோக்கர் திரைப்படம் கடந்த வார இறுதியில் 13 திரையரங்க வளாகங்களில் 102 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.19,52,360 வசூல் செய்துள்ளதோடு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீஸ் தினமான ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 21 வரை இந்த படம் ரூ.66,17,540 வசூல் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த வாரம் 11 திரையரங்க வளாகங்களில் 70 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ13,34,210 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.12,17,36,540 என்பதும் சென்னையில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் நடித்த 'நம்பியார்' நெகட்டிவ் விமர்சனம் காரணமாக மிகக்குறைவான வசூலையே பெற்றுள்ளது. இந்த படம் 12 திரையரங்க வளாகங்களில் 60 காட்சிகள் ஓடி ரூ.9,28,430 வசூல் செய்துள்ளது.
அதேபோல் விக்ரம்பிரபு நடித்த வாஹா திரைப்படமும் சுமாரான வசூலையே பெற்றுள்ளது. இந்த படம் 8 திரையரங்க வளாகங்களில் 30 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.4,24,640 மட்டுமே பெற்றுள்ளது.