மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்...! யுவன் ஹிட் பாடலின் புதிய சாதனை....!

தனுஷ்-ன் ‘ரெளடி பேபி’ பாடலானது 5 மில்லியன் லைக்குகளைப் பெற்று இணையத்தையே அதிர வைத்துள்ளது.

சென்ற 2018-ஆம் ஆண்டு, இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருந்த படம் தான் மாரி 2. இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, தனுஷ் வரிகள் எழுத ரெளடி பேபி பாடல் பிரமாண்ட ஹிட் அடித்தது. உலகளவில் பிரபலமான இப்பாடலுக்கு ஜானி மாஸ்டர், பிரபுதேவா உள்ளிட்ட நடன இயக்குனர்கள், நடனம் அமைக்க, குதூகலிக்கும் குரலில் தீ மற்றும் தனுஷ் பாடலை பாடியிருந்தார்கள்.

குத்தாட்டம் போட வைக்கும் இசையும், ரசிக்க வைக்கும் குரலும், உணர்வை தூண்டும் டான்ஸ் ஸ்டெப் -களும் பெரும்பான்மையான ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. பலரும் ரீப்பீட் மோடில் இப்பாடலை கேட்க 1 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்த தென்னிந்தியாவின் முதல் பாடல் என்ற சாதனையை படைத்தது.

இந்தநிலையில் ரவுடி பேபி பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தென்னிந்தியாவிலே 5 மில்லியன் லைக்ஸ்கள் வாங்கிய முதல் பாடல் பெருமையையும் பெற்றுள்ளது. தனுஷ் ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.