ஒரே படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, யுவன் ஷங்கர் ராஜா.. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரே திரைப்படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் பணி புரிந்துள்ளதாக ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் தான் மேற்கண்ட நபர்கள் பாடல்களை பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.எச்.காசிப் இசையில் உருவாகிய இந்த படத்தின் பாடல்கள் குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோவை ஏஆர் ரகுமான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பாடியவர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ
1. பாடல்: நண்பன் ஒருவன் வந்த பிறகு: பாடியவர்கள்: சாம் விஷால் ,ஷிவாங்கி, ஸ்ரீனிவாசா ஜெயசீலன், அஜய் கிருஷ்ணா
2. பாடல்: வெட்டி பையன்: பாடியவர்: வைசாக்
3. பாடல்: வாரானே: பாடியவர்கள்: பம்பா பாக்யா
4. பாடல்: தேடி தேடி தூரம் போகிறேன்: பாடியவர்: ஏ.எச்.காசிப்
5. பாடல்: பகோடா; பாடியவர்: ஹிப் ஹாப் தமிழா ஆதி
6. பாடல்: அவ ஓகே சொல்லிட்டா; பாடியவர்கள்: ஜிவி பிரகாஷ், நகுல் அபயங்கர்
7. பாடல்: நீ ஏன் தூரம் இருக்கிறாய்: பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, அமினா ரஃபிக்
8. பாடல்: அழாதே: பாடியவர்கள்: தனுஷ், சாம் விஷால், ஹர்ஷவர்தன்
லீலா, குமரவேல், விஷாலினி, ஐஸ்வர்யா, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்பான், கேபிஒய் பாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.எப் காசி இசையில், ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
All the best @imkaashif, happy to see the track list of #NOVP and congrats @thinkmusicindia @vp_offl and the whole team!
— A.R.Rahman (@arrahman) August 8, 2023
Produced by @Aishwarya12dec
A life by @ActorAnanth @BhavaniSre
🔗https://t.co/DG2OhYqcld pic.twitter.com/gNuRFy6Pzj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments