close
Choose your channels

மலையாள படத்தின் பாடலாசிரியராக மாறிய தனுஷ்!

Wednesday, August 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் தற்போது மலையாள படம் ஒன்றுக்காக பாடல் எழுதி அந்த பாடலை பாடியும் உள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் நடித்து வரும் திரைப்படம் 'பிரதர்ஸ் டே'. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு டியூனை கம்போஸ் செய்த இசையமைப்பாளர் 4 மியூசிக் நதிர்ஷா, அந்த டியூனுக்கு பாடல் எழுதி தரும்படி தனுஷை கேட்டுக்கொண்டார். தனுஷ் அந்த டியூனுக்கு பாடல் எழுதி தருவதோடு பாடியும் தர சம்மதித்துள்ளார். இந்த பாடல் மலையாள திரையுலகின் 'ஒய் திஸ் கொலைவெறி'யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்விராஜ், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரக்யா, மடோனா செபாஸ்டியன், மியா ஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ள 'பிரதர்ஸ் டே' படத்தை கலாபவன் ஷாஜான் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment