தனுஷின் 'கொடி'யில் இருந்து ஷாமிலி நீக்கமா?

  • IndiaGlitz, [Tuesday,February 09 2016]

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது. எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷ் முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கின்றார்.


இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் முடிவடைந்த நிலையில் ஷாமிலி இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையாம்.

மேலும் இந்த படத்தில் ஷாமிலி நடிக்கவில்லை என்றும் ஷாமிலிக்கு பதிலாக 'காதலும் கடந்து போகும்' நாயகி மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-கெளதம் மேனன் படத்தின் டைட்டில்

'தங்கமகன்' படத்தை அடுத்து 'கொடி' படத்தில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், அடுத்து வெற்றிமாறன்...

விஜய்யின் அடுத்த படத்தில் 4 இசையமைப்பாளர்கள்

மதராசபட்டிணம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் அதன்பின்னர் இயக்கிய தெய்வத்திருமகள்'...

சேதுபதி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் உள்ள விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் ...

மலேசியா அருகில் உள்ள தீவில் 'கபாலி' டீம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் 'கபாலி' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பதை...

'நவரசதிலகம்' சென்சார் விபரங்கள் மற்றும் ரிலீஸ் தேதி

தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து நடிகராக மாறியுமா.கா.பா ஆனந்த் கதாநாயகனாக நடித்து வந்த 'நவரச திலகம்' என்ற திரைப்படம்...