'வாத்தி' இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து வரும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படமான ’வாத்தி’ என்ற திரைப்படத்தின் இயக்குனருக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வாத்தி’. தெலுங்கில் ‘சார்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று இயக்குனர் வெங்கி அட்லுரி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ள தனுஷ், ‘எனது முதல் தமிழ் தெலுங்கு என இரு மொழி படத்தை இயக்கும் வெங்கி அட்லுரிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் வெங்கியுடன் தனுஷ் இருக்கும் புகைப்படமும் தனுஷின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Wishing a very happy birthday to venky atluri director of my first Tamil/telugu bilingual Vaathi / Sir. God bless you venky. Have a blast. pic.twitter.com/XeyPsJ5WGd
— Dhanush (@dhanushkraja) April 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com