கோபத்தில் வெளியேறினாலும் குணத்தில் தங்கம் என்று நிரூபித்த தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'விஐபி 2' திரைப்படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளதால் இந்தியா முழுவதும் தனுஷ் இந்த படத்தை தானே முன்னின்று புரமோஷன் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலுக்கு தனுஷ் பேட்டி அளித்தார். பேட்டி எடுத்த பெண், 'விஐபி 2' படத்தை பற்றிய கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென தனுஷின் குடும்பம், சுசிலீக்ஸ் குறித்த கேள்விகளை கேட்டார். இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ் 'முட்டாள்தனமான பேட்டி' என்று கூறி மைக்கை பிடுங்கி கீழே எறிந்துவிட்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறினார்.
இதனால் தொலைக்காட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தனுஷை சமாதானப்படுத்தி மீண்டும் பேட்டிக்கு அழைத்து வந்தனர். ஒருசில நிமிடங்கள் கண்ணை மூடி அமைதியாக இருந்த தனுஷ் பின்னர் தன்னை கோபப்படுத்தும் கேள்வியை பேட்டி எடுத்த பெண் கேட்டிருந்தாலும் அவரை மன்னித்து மீண்டும் பேட்டி முழுமையாக முடிய ஒத்துழைத்தார். இது அவரது முதிர்ச்சியை காட்டுவதாகவே தெரிகிறது.
பேட்டி எடுப்பவருக்கும் ஒரு சமூக பொறுப்பு உள்ளது என்பதும் பேட்டியாளரை கோபப்படுத்தும் வகையில் உறுதித்தன்மையற்ற மற்றும் சொந்த வாழ்க்கையின் நெருடல்கள் குறித்த கேள்விகளை தவர்ப்பதே பத்திரிகை நியாயம் என்பதும் அனைவருக்கும் புரிய வைக்கும் பேட்டியாகவே இந்த பேட்டி அமைந்தது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments