'கபாலி' ரிலீசுக்காக காத்திருக்கும் தனுஷ்

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலை 15-ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தெரிந்து கொள்ள ரஜினி ரசிகர்களை விட ஒருசில தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'கபாலியின் ரிலீஸ் தேதியை பொறுத்தே தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அவர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆம், தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கியுள்ள 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 'கபாலி' படத்தின் ரிலீஸ் மற்றும் அதற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து ஜூலை 29 அல்லது ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
'தொடரி' மட்டுமின்றி மேலும் ஒருசில படங்களும் 'கபாலி' ரிலீஸ் தேதியை தெரிந்து கொண்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்போதைக்கு 'கபாலி' ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் தேதியில் எந்த படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றும் கபாலி' சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'கபாலி' இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது...

நான் தமிழ் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா? சன்னிலியோன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், பாலிவுட் படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட ஒருசில தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்....

சீயான் விக்ரமின் மாப்பிள்ளை கருணாநிதிக்கு சொந்தமா? புதிய தகவல்

பிரபல நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

24 வருட விஜய்யின் திரையுலக வரலாற்றில் 'தெறி' செய்த முதல் சாதனை

இளையதளபதி விஜய் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் சமீபத்தில் வெளியான 'தெறி' திரைப்படம்தான் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது...

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு'...