கமல், அஜீத், சூர்யாவின் பட்டியலில் இணைந்த தனுஷ்?

  • IndiaGlitz, [Thursday,September 03 2015]

'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்', 'மாரி' ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் நடித்த அடுத்த படமான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை, டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில், இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்', அஜீத்தின் 'அடங்காதவன்' மற்றும் சூர்யாவின் '24' ஆகிய பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது தனுஷின் 'விஐபி 2' படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தனது சொந்த நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்த இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு பெற்றுள்ளதாகவும், விரைவில் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'விஐபி' படத்தை இயக்கிய வேல்ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

More News

மீண்டும் ரீமேக் செய்கிறார் 'தனி ஒருவன்' ராஜா

இதுவரை மற்ற மொழிகளில் ரிலீஸான வெற்றி படங்களை மட்டுமே ரீமேக் செய்து 'ரீமேக் ராஜா' என்ற பெயரை பெற்ற மோகன் ராஜா...

சரத்குமார்-விஷாலை ஒன்று சேர்த்த 'பாயும் புலி' பிரச்சனை?

விஷால் நடித்த பாயும் புலி' உள்பட எந்த தமிழ் திரைப்படமும் வரும் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என நேற்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது...

'ரஜினிமுருகன்' படத்தின் சென்சார் விபரங்கள்

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்...

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவா, கார்த்திகா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது....

'தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி. கவுதமி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...