அடுத்தடுத்து திகட்ட திகட்ட இசை விருந்து.. ஒரு சில நிமிட இடைவெளியில் 4 பிரபலங்கள் பாடல்கள் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக இசை ரசிகர்களுக்கு இன்று திகட்ட திகட்ட ஒரு சில நிமிட இடைவெளியில் நான்கு பிரபல நடிகர்களின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமா மீண்டும் தற்போது தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா கடந்த சில மாதங்களில் நஷ்டத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெற்றி படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் ஒரு சில நிமிட இடைவெளியில் தனுஷின் ’ராயன்’ படத்தில் இடம்பெற்ற பாடல், ராம் இயக்கத்தில் உருவான ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் இடம்பெற்ற பாடல், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி குரலில் ’சார்’ என்ற படத்திற்காக பாடிய பாடல் மற்றும் பிரபுதேவா, வேதிகா நடித்த ’பேட்ட ராப்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் என 4 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இந்த நான்கு பாடல்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.

இதில் குறிப்பாக ராயன் படத்தில் இடம்பெற்ற ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த அதிரடி பாடல் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். அதேபோல் ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் இடம்பெற்ற பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடிய ’பனங்கருக்கா’ என்ற பாடல் முதல் முறை கேட்கும் போது உள்ளத்தை உருக வைக்கும் அளவுக்கு உள்ளது. அதேபோல் ’பேட்ட ராப்’ படத்தில் இடம்பெற்ற ’அதிரட்டும் டும் டும்’ என்ற பாடல் எழுந்து கேட்பவர்களை எழுந்து ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு உள்ளது. மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள் என்றால் அது மிகை ஆகாது.