close
Choose your channels

40 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற தனுஷ்

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' படங்களை இயக்கிய வெற்றிமாறன் 3வது முறையாக தனுஷூடன் இணைந்து இயக்கி வரும் படம் 'வடசென்னை.
1977 முதல் இன்று வரையிலான 40 ஆண்டுகால கதையை கூறும் வகையில் உருவாகி வரும் இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவரவுள்ளதாகவும், முதல் பாகம் வரும் 2017-ல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மத்திய சிறைச்சாலை போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது 1977ஆம் ஆண்டுகால காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், அந்த காலத்தை அப்படியே திரையில் தோன்றும் வண்ணம் மிக இயல்பாக படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment