40 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற தனுஷ்

  • IndiaGlitz, [Thursday,July 28 2016]

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' படங்களை இயக்கிய வெற்றிமாறன் 3வது முறையாக தனுஷூடன் இணைந்து இயக்கி வரும் படம் 'வடசென்னை.
1977 முதல் இன்று வரையிலான 40 ஆண்டுகால கதையை கூறும் வகையில் உருவாகி வரும் இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவரவுள்ளதாகவும், முதல் பாகம் வரும் 2017-ல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மத்திய சிறைச்சாலை போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது 1977ஆம் ஆண்டுகால காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், அந்த காலத்தை அப்படியே திரையில் தோன்றும் வண்ணம் மிக இயல்பாக படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

More News

மீண்டும் எம்.ராஜேஷ் படத்தில் சந்தானம். ஆனால்...

எம்.ராஜேஷ் இயக்கிய படங்களில் சந்தானம் தவறாது காமெடி வேடங்களில் நடித்து வருவது கடந்த சில வருடங்களாக நிகழ்ந்து வருகிறது...

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' டிராக் லிஸ்ட்

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

The Expendables படத்துடன் கனெக்ஷன் ஆனது 'தல 57'

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சில்வர்ஸ்டர் மற்றும் அர்னால்ட் நடித்த The Expendables' படம் உள்பட பல ஹாலிவுட்...

'Vijay 60' heroine confirms Puratchi Thalaivar title?

While the team ‘Vijay 60’ are gearing up to fly to Europe for shooting some important action scenes and a couple of duets featuring Vijay and Keerthi Suresh, there comes an exciting buzz about the title of the film...

தனுஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தில் ஒரு மாணவனாக அறிமுகமான துடிப்புள்ள இளைஞரான தனுஷ்...