தனுஷுடன் இணையும் ஜீவா-விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,December 25 2015]

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து தனுஷூடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள வெற்றிமாறனின் 'வடசென்னை' அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷூடன் சமந்தா இணையவுள்ள இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபல ஹீரோக்கள் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இந்த படத்தில் தனுஷின் கேரக்டருக்கு சமமான ஒரு கேரக்டரில் நடிக்க ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜீவா திருநாள், போக்கிரிராஜா, கவலை வேண்டாம், மற்றும் ஜெமினிகணேசன் என நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் கால்ஷீட் தேதிகள் ஒத்து வந்தால் இந்த படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதேபோல் இந்த படத்தில் உள்ள நெகட்டிவ் கேரக்டர் ஒன்றுக்கு விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படம் விஜய்சேதுபதிக்கு பிரேக் கொடுத்ததால், தனுஷூக்காக இந்த படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரை ஏற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. அப்போது ஜீவா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து தெரியவரும்.