தேசிய விருதை அடுத்து அசுரனுக்காக மேலும் ஒரு விருதை பெறும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அந்த ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்குமே தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தேசிய விருதை அடுத்து இதற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அசுரன் திரைப்படம் 52வது IFFI52 திரைப்பட விழாவில் சமீபத்தில் பங்கேற்ற நிலையில் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய இரண்டு விருதுகளை பெற்றுள்ளதாக IFFI அமைப்பு தெரிவித்துள்ளது

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக IFFI அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து தனுஷின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.