'பொல்லாதவன்' விளையாட்டை 'வடசென்னைக்கு' கொண்டு வந்த தனுஷ்-வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

உலகநாயகன் கமல்ஹாசன் 'சத்யா' படத்திலும், இளளயதளபதி விஜய் 'திருமலை' படத்திலும் கேரம் விளையாட்டு விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 'வடசென்னை' படத்திலும் தனுஷ் கேரம் விளையாடுவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் இதற்காக அவர் கேரம் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமாக ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள 'தொடரி' மற்றும் 'கொடி' படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் 'இறுதிச்சுற்று' நாயகி

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஷிவலிங்கா'

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'நாயகி'...

சிம்பு-ஆதிக் படத்தில் யுவன் செய்த புதுமை இதுதான்...

சிம்பு நடிப்பில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள 'அன்பானவன் அசராவதவன் அடங்கதவன்'...

'தல 57' படத்தில் அஜித் கேரக்டர் என்ன? புதிய தகவல்

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது...

’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

‘காதல் கொண்டேன்’ படத்தில் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு அந்த காயம் மனதில் ரணமாக இருந்துகொண்டு இருக்கும் சிறுவன் கிராமத்து விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவன்...