close
Choose your channels

தம்மாதுண்டு 'ஆங்கர்' தாண்டா அவ்வளவு பெரிய கப்பலை நிறுத்துது: 'வடசென்னை' புதிய டீசர் விமர்சனம்

Thursday, October 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை' திரைப்படம் வரும் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் புதிய டீசரை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆக்ரோஷமான தனுஷ், அடிபட்ட சமுத்திரக்கனி, பார்வையால் பேசும் ஆண்ட்ரியா, ஆத்திரக்காரனாக டேனியல் பாலாஜி, அமைதியும் அழுத்தமும் கலந்த கிஷோர் ஆகியோர்களின் காட்சிகள் இந்த 36 வினாடிகளே உள்ள டீசரில் உள்ளது. மேலும் 'தம்மாதுண்டு இருந்துக்கினு என்னையே மிரட்டுறியா? என்று வில்லன் வசனம் பேச அதற்கு தனுஷ் 'தம்மாதுண்டு 'ஆங்கர்' (நங்கூரம்) தாண்டா அவ்வளவு பெரிய கப்பலை நிறுத்துது' என்று கூறுவதோடு இந்த டீசர் நிறைவு பெறுகிறது.



புதியதாக வெளிவந்துள்ள இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த டீசர் வெளியான சில நிமிடங்களில் டுவிட்டர் டிரெண்டில் உள்ளது என்பதே இதற்கு சாட்சி. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் திருப்தி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment