அடுத்தடுத்த நாட்களில் 2 தனுஷ் படங்களின் அப்டேட்டுக்கள்: ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 23ஆம் தேதி தனுஷ் நடித்து முடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ’கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை வெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
’உன் ஒளியிலே’ என்று தொடங்கும் இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷின் மெலடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் ரொமான்ஸ் டூயட் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் பெரியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The #CaptainMiller Second Single is Dropping Tomorrow at 5 PM 💥#UnOliyile #KreeNeedale #TuRoshni
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 22, 2023
Let The Countdown To Musical Bliss Begin! 😎
A @gvprakash Musical 🎶
@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna@sundeepkishan @priyankaamohan @saregamasouth pic.twitter.com/xGYZPhGCKh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com