மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்துள்ள இந்த படத்தை அடுத்து மீண்டும் தனுஷ், மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தனுஷ் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளேன் என்றும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகி விட்டன என்றும், அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து கலைப்புலி தாணு அவர்கள் ’அளவில்லா ஆனந்தம்’ என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தற்போது துருவ்விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலி: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் 

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா நடராஜன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மாலத்தீவு போட்டோ....! பிரபலங்களை எச்சரித்த ஸ்ருதி ஹாசன்...!

திரையுலக பிரபலங்கள் மாலத்தீவு செல்வது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு, நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தடுப்பூசிக்கு ஒரே விலையில்லையா...? மத்திய அரசை  சரமாரியாக கேள்வி கேட்கும் மம்தா, சோனியா....!

தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்துள்ளதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

அலட்சியத்தால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி… பகீர் சம்பவம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து உள்ளார்