தனுஷின் 'கொடி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 01 2016]

தனுஷ் நடித்த 'தொடரி' சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 31வது படமான இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அக்டோபர் 5ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக தனுஷ் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுடன் கைகோர்த்து உள்ளதால் இந்த படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் த்ரில்லர் படமான இந்த படத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

சூர்யா வெளியிட்ட தந்திரமான ஃபர்ஸ்ட்லுக்

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை 'ஜெயம்கொண்டான்'...

தோனி பற்றி ஒரு ரசிக்கத்தக்க படம்

இந்தியாவில் ஒரு மதம் போல் பின்பற்றப்படும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பற்றி இதுவரை எந்தப் படமுமே வந்ததில்லை என்று சொல்லிவிடலாம்...

தோனி பற்றி ஒரு ரசிக்கத்தக்க படம்

தனுஷ் எங்கள் மகன். உரிமை கொண்டாடும் திருப்புவனம் தம்பதி

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் ரஜினியின் முத்த மருமகனாகவும் இருக்கும் நடிகர் தனுஷை தங்களது மகன்...

எப்படி விஜய்யால் மட்டும் முடிகிறது. ஆச்சரியப்பட்ட 'பைரவா' வில்லன்

பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உள்பட பல படங்களில் வில்லன் நடிப்பில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகர் டேனியல் பாலாஜி...