close
Choose your channels

'கொடி' இசை வெளியீடு எப்போது? தனுஷ் தகவல்

Saturday, September 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் தனுஷ் 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். மேலும் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'கொடி' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'கொடி' படத்தின் ஆல்பம் தயாராகவிட்டதாகவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் மாஸ்டர் காப்பி ஆல்பத்தை ஒப்படைத்துவிட்டதாகவும், 'தொடரி' ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் என இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment