தனுஷின் 'கொடி' மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி-நேரம்

  • IndiaGlitz, [Sunday,September 25 2016]

தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் 'கொடி' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'கொடி' படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 28ஆம் தேதி இரவு 7மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அரசியல் த்ரில்லர் படமான 'கொடி' படத்தில் தனுஷ் முதன்முதலாக தந்தை, மகன் என இரண்டு வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். தனுஷுடன் முதன்முதலாக த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்த படத்தில் இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

'இமைக்கா நொடிகள்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

அதர்வா முரளி நடித்து தயாரிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும்,

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

'AAA'படத்தில் சிம்புவின் ஆச்சரியமான 2வது கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து...