சினிமாவில் மட்டுமல்ல, இதிலும் இணைந்த தனுஷ்-ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

தனுஷ் நடித்த பல திரைப்படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பாக பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு ஜிவி பிரகாஷின் இசை அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான தனுஷின் ’அசுரன்’ திரைப்படத்திற்கு அட்டகாசமாக பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சினிமாவில் மட்டுமின்றி தற்போது உடற்பயிற்சி செய்வதிலும் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளனர். இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷுடன் இணைந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள தனுஷின் 43-வது படத்திலும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அன்பும், அன்பளிப்பும் தந்த சிம்புவுக்கு நன்றி: பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

தன்னுடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதோடு தனக்கு அன்பும் அன்பளிப்பும் தந்த சிம்புவுக்கு நன்றி என பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

நீதிமன்றமாகும் பிக்பாஸ் வீடு: குற்றவாளிகள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகுச்சிலை… கேள்விக்குறியுடன் ஊடகங்கள்!!!

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற மடாமே மெழுகு சிலை அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.

மீண்டும் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறவில்லை என்பது தெரிந்ததே.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு ஆச்சரிய தகவல்!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது