கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மேலும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை 'மேயாதா மான்' இயக்குனர் ரத்னகுமார் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' மற்றும் கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து பாலாஜி மோகனின் 'மாரி 2', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஆகிய படங்களை முடித்துவிட்டு, பின்னர் 'மேயாத மான்' இயக்குனர் படத்தில் தனுஷ் இணைவார் என்று கூறப்படுகிறது