தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

பிரபல நடிகர் தனுஷ் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த அறிவிப்பு சற்று முன் தனுஷின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் டைட்டில் 'வேலையில்லா பட்டதாரி 2' என்பதுதான் அந்த அறிவிப்பு. வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கின்றார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகவுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. இந்த அறிவிப்பு தனுஷின் ரசிகர்களை பெருமளவு உற்சாகப்படுத்தியுள்ளது.